Book introduction
திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் இராணுவ விஞ்ஞானி முனைவர் வி. டில்லி பாபு எழுதிய “வெள்ளோட்டம் வெல்லட்டும்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ. கு. சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கி நூலின் அட்டைப்படத்தை வெளியிட்டார். ம. அருந்ததி, முனைவர் ஜி. சுவாமிநாதன், திரு. S. கௌரிசங்கர், திரு. G. சிவகுருநாதன் ஆகியோர் நூலின் சிறப்புகளைப் பகிர்ந்து, 24 மிலிட்டரி சாதனங்கள், இந்திய இராணுவ வளர்ச்சி மற்றும் விஞ்ஞானிகளின் உழைப்பு குறித்து பாராட்டினர். சிறப்பு விருந்தினர் முனைவர் வி. டில்லி பாபு, அறிவியலை தமிழில் எளிமையாகக் கொண்டு செல்ல முடியும் என்றும், மாணவர்கள் புதுமைகளைப் புகுத்தி தேச முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.